நடிகர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் முழு திரைப்படமும் ஹெச்டி தரத்தில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக பதிவேற்றப்பட்டுள்ளதாக தகவல்.
நடிகர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை வாரிய சிக்கல்களால் திரையரங்குகளில் வெளியாக தாமதமாகி கொண்டிருக்கின்ற நிலையில் ,நேற்று மாலை படத்தின் தலைப்பு மற்றும் சில காட்சிகள் 5 நிமிட ஓடக்கூடிய நிலையில் சமூக வலைதளம் மற்றும் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை தந்தது, இந்நிலையில், தற்பொழுது முழு திரைப்படமும் ஹெச்டி தரப்பில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக பதிவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பலரின் உழைப்பு- கனவு திரைப்படமாக உருவாகி இருப்பதனால் இப்படத்தின் காட்சிகளை பகிர வேண்டாம் என்று ஏற்று வினோத் மற்றும் பட தயாரிப்பு நிறுவனமும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று படம் முழுமையாக வெளிவந்திருப்பது கோடம்பாக்கம் திரையுலக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது பட காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ அல்லது சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. திரைப்படம் என்பது பல ஆயிரம் கோடிகளால் உச்சபட்ச நடிகர்களை வைத்து எடுக்கப்படும் பழத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகளின் உழைப்பும் பொருளாதாரமும் உள்ளடக்கியது. இது போன்று வெளியிடுவதின் மூலமாக மிகப்பெரிய ஒரு பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால் அதனை ஆதரிக்க வேண்டாம் என்று திரை உலக சார்ந்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags :















.jpg)


