முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்சென்ட்ரல் மெட்ரோ ரயில் இருந்து தேனாம்பேட்டை வரை பயணம்-சக பயணிகளுடன் அமர்ந்து கலந்துரையாடினாா்.

by Admin / 10-04-2026 12:01:08pm
 முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்சென்ட்ரல் மெட்ரோ ரயில் இருந்து தேனாம்பேட்டை வரை பயணம்-சக பயணிகளுடன் அமர்ந்து கலந்துரையாடினாா்.

தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் இன்று காலை சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் இருந்து தேனாம்பேட்டை வரை பயணம் செய்து சக பயணிகளுடன் அமர்ந்து கலந்துரையாடியதோடு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனையை விளக்கி தனது கட்சிக்கு ஆதரவுகோாினாா்.  மெட்ரோ ரயிலிலும்  வளாகத்திலும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் மிக உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டார் .இந்த பயணம் குறித்து முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கத்தில் ,மக்களின் அன்பால் நிறைந்த பயணம் இது என்று நிகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளதோடு மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தான் துணை முதலமைச்சர் ஆக இருந்தபோது ஜப்பான் சென்று நிதி ஆதாரம் திரட்டியதை,

-துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!

விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.

அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.

விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்என்றுஇத்தருணத்தில் நினைவு கூர்ந்து உள்ளார். 

 முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்சென்ட்ரல் மெட்ரோ ரயில் இருந்து தேனாம்பேட்டை வரை பயணம்-சக பயணிகளுடன் அமர்ந்து கலந்துரையாடினாா்.
 

Tags :

Share via

More stories

Logo