திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை

by Staff / 18-01-2024 11:56:58am
திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை

திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, திருச்சி மாநகரில் வரும் 20ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 21ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு 108 வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்துவிட்டு அயோத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி ஸ்ரீரங்கத்துக்கு வர உள்ளார். பிரதமர் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories