கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் வீட்டில் சிபிஐ சோதனை....ஆவணங்கள் பறிமுதல்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவகுமார் வீட்டில் சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக நேற்று இரவு கனகபுரியில் உள்ள ஒரு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பணமோசடி மற்றும் சட்ட விரோதமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையின் போது சொத்து தொடர்பான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சிவக்குமாரின் வீடு மற்றும் கனகபுரா, தொட்டலஹள்ளி, சந்தே கொடிஹள்ளி உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டனர். சிவக்குமாரின் சொத்துக்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் மீது சட்ட விரோதமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 2020ல் டி.கே. சிவகுமார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் சிவகுமாருக்கு சொந்தமான 14 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
ரெய்டுக்குப் பிறகு அவர் ரூ.75 கோடியை சட்ட விரோதமாகச் சேர்த்துள்ளதாகவும் சிபிஐ தெரிவித்தது. இதனிடையே, பணமோசடி வழக்கில் டி.கே. சிவகுமார் சமீபத்தில் அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார்.
Tags :