காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு  பாதுகாப்பு பணிகள் நடவடிக்கை குறித்து ஆய்வு.

by Editor / 21-07-2024 11:09:22am
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு  பாதுகாப்பு பணிகள் நடவடிக்கை குறித்து ஆய்வு.

கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி , ஹாரங்கி, ஹேமாவதி, நூகு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் அப்படியே காவிரியில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகின்றன. மற்ற அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றது . மேலும்  இந்த அணைகளில் இருந்து தற்போது வினாடிக்கு 75  ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் ஒரே நீராக வெளியேற்றப்பட்டுள்ளது. 

இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 65 ஆயிரம் கன ஆக உயர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிச் செல்கின்றன. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது. 

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, பாதுகாப்பு பணிகள் குறித்தும் நீர்வரத்து குறித்தும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவில், ஊட்ட மலை, ஆலம்பாடி பரிசல் துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் நாடார் கொட்டாய், ஊட்டமலை ,சத்திரம், மற்றும் நெருப்பூர் உள்ளிட்ட காவிரிகரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 

 

Tags : காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு  பாதுகாப்பு பணிகள் நடவடிக்கை குறித்து ஆய்வு.

Share via