ஜெயலலிதா பாணியில் 4 மாநாடுகளை நடத்த விஜய் திட்டம்

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னால் மண்டல அளவில் 4 மாநாடுகளை நடத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்.26ஆம் தேதி கட்சியின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கு இடையே இந்த 4 மண்டல மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதே போன்று 2014, 2016 தேர்தல்களின்போது சுற்றுப்பயணம், மாநாடுகளை நடத்தினார்.
Tags :