60 வயது மனைவியை கொன்ற கணவன்

சேலம் கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (70). இவரது மனைவி இந்திரா (60). இந்நிலையில் இந்திராவுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை கைவிடக்கோரி அடிக்கடி இந்திராவுடன் பாலகிருஷ்ணன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை இந்திராவை கழுத்தை அறுத்து கொலை செய்த பாலகிருஷ்ணன், தனது மனைவியின் கள்ளக்காதலுக்கு உதவி செய்த இந்திராவின் சகோதரி வீட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றார். தற்போது பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :