பிரஜ்வல் குறித்து மனம் திறந்த மோடி

by Staff / 07-05-2024 04:11:15pm
பிரஜ்வல் குறித்து மனம் திறந்த மோடி

ஆபாச வீடியோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ண வழக்கில் முதன் முறையாக பிரதமர் மோடி மவுனம் கலைத்துள்ளார். ஜே.டி.எஸ்-காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவம் என்பதை உணர்த்துகிறது. காங்கிரஸ் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் இந்த வீடியோக்களை சேகரித்து, தேர்தல் சமயத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கு வெளியிட்டிருக்கின்றனர். அதுவும், பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க காங்கிரசின் அரசியல் விளையாட்டு. பிரஜ்வலை இந்தியா அழைத்துவந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

 

Tags :

Share via