திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.குடமுழுக்கு விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்,இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளும் ரயில்களும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இன்று மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில்.திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற ஜூலை 7ஆம் தேதி அன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயிலானது 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்,மறுமார்க்கம் திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் ரயிலானது திருநெல்வேலிக்கு மதியம் 12.55 மணிக்கு சென்றடையும்.இந்த சிறப்பு ரயிலானது பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நசரேத், குரும்பூர் மற்றும் ஆறுமுகநேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இன்று செல்லும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Special train operation on the occasion of Tiruchendur Kudamuzhu festival - Southern Railway Madurai Division Announcement



















