முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைப்பு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (80) உடல்நலக்குறைவால் புதன்கிழமை இரவில் காலமானார். சென்னை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது. இதனிடையே இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைப்பு.



















