ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்-டி.ஆர்.பாலு

by Editor / 19-07-2023 08:40:54pm
ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்-டி.ஆர்.பாலு

தமிழ்நாடு ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளதாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு தகவல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு, “விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கவும் கோரிக்கை வைக்கவும் உள்ளோம். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம்” என தெரிவிவித்துள்ளார்

 

Tags :

Share via