அமெரிக்க மசூதியில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகரில் உள்ள மசூதி ஒன்றில் புகுந்த இருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலுக்கு பின் தப்பியோடிய 17 மற்றும் 18 வயதுடைய அந்த இரு இளைஞர்களும், அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் தங்களைத்தாங்களே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :


















