தலைவனுக்கு தொண்டன் கட்டிய தாஜ்மஹால் - வைரமுத்து

by Staff / 26-02-2024 12:19:11pm
தலைவனுக்கு தொண்டன் கட்டிய தாஜ்மஹால் - வைரமுத்து

கலைஞர் நினைவிடம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு சென்ற கவிஞர் வைரமுத்து புகைப்படத்தை பகிர்ந்து,கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன், கலைஞரின் கையைப் பிடித்துக்கொண்டே கலைஞர் நினைவிடம் சுற்றிவந்த உணர்வு. இது தந்தைக்குத் தனயன் எழுப்பிய மண்டபமல்ல தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால். இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம். கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார் உருவமாய் ஒலியாய் புதைத்த இடத்தில் கலைஞர் உயிரோடிருக்கிறார். உலகத் தரம்! நன்றி தளபதி! என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo