சூரிய உதயத்திற்கு முன் குளிப்பது நல்லது

by Writer / 12-09-2021 04:56:31pm
சூரிய உதயத்திற்கு முன் குளிப்பது நல்லது

சூரிய உதயத்திற்கு முன் வருகின்ற மூன்றே முக்கால் நாழிகையான அதிகாலை நான்கரை மணி முதல் ஆறு மணிவரை இருக்கும் ஒன்றரை மணி நேரமே பிரம்ம முகூர்த்தம் எனப்படும். பிரம்மா தன் படைப்புத்தொழிலைச் செய்யும் இந்த நேரத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதால் எந்த தோஷமும் வராது. அதனாலேயே இது பிரம்ம முகூர்த்தம் என்று பெயர் பெற்றது.

, சூரிய உதயத்திற்கு முன் நாம் எழுந்து குளிக்கும்போது குளிர்ந்த நீரை அப்படியே எடுத்து தலைக்கு ஊற்றுவது முற்றிலும் தவறாகும். குளிர்ந்த நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும். அதன் பின்னர், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, கடைசியில் தலைப்பகுதி என ஊற்றும்போது, வெப்பம் காலில் இருந்து கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும். அதைவிடுத்து, நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உடலுக்குள்ளேயே சுற்றி கொண்டிருக்கும்.

அதேபோல், ஆறு, குளத்தில் குளிப்பதற்காக இறங்கும்போது, காலில் இருந்து மேல் நோக்கி குளிரும். வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும்போது கண், காது வழியாக வெளியேறிவிடும். முன்னதாக ஆற்றில் இறங்கும் முன் உச்சந்தலைக்கு சிறிது தண்ணீரை எடுத்து தீர்த்தம்போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள். அது எதற்காக எனில், குளத்தில் இறங்கும்போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறி விடும். மேலும், சூரிய உதயத்திற்கு முன் பச்சை தண்ணீரில் குளிக்கும்போது பித்தம் நீங்கி, பிராண வாயு அதிகரித்து அனைத்து நோய்களும் சென்று விடும். மனநல பாதிப்பு கூட சரியாகும் வாய்ப்பு உள்ளது.

 

Tags :

Share via