கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

by Editor / 03-11-2022 07:59:04am
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி குளிப்பதற்கு வனத்துறை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு பகுதிக்கு சென்று பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மறு அறிவிப்பு வரும் வரை கும்பக்கரை அருவிக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்யாமல் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராக இருந்து வந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் மலைப்பகுதியில் திடீரென பெய்த கனமழையால் தற்போது கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via