சபரிமலையில் டோலி சேவை இனி கிடையாது-தேவசம் போர்டு அமைச்சர் திரி வாசவன்

கேரளா தேவசம் போர்டு அமைச்சர் திரி வாசவன் நிருபர்களிடம் கூறியதாவது:சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரையில் அமைக்கப்படும் 'ரோப் வே' திட்ட கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. ரூ.250 கோடியிலான இந்த திட்டம் 1½ ஆண்டுகளில் முடிக்கப்படும். 'ரோப் வே' சரக்குகளை கொண்டு வரவும், வயதான, நோய் வாய்பட்ட பக்தர்களை அழைத்து வரவும் இந்த திட்டம் பயன்படுத்தப்படும். சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்களை சுமந்து செல்லும் டோலி சேவை ரத்து செய்யப்படும். இதில் வாழ்வாதாரம் இழக்கும் டோலி தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Tags : தேவசம் போர்டு அமைச்சர் திரி வாசவன்