செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இபிஎஸ் ஆவேசம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்எல்ஏ கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உடனே டென்ஷனான இபிஎஸ், “அதை அவரிடம் போய் கேளுங்க. என்னை சந்திக்காமல் ஏன் தவிர்க்கிறார் என்று போய் கேளுங்கள். தனிப்பட்ட விஷயங்களை கேட்காதீர்கள். அவரவருக்கு பல்வேறு வேலைகள் இருக்கும். நான் என்றைக்குமே யாரையும் எதிர்பார்ப்பது கிடையாது” என பதிலளித்துள்ளார்.
Tags :