நகைக் கடன் தள்ளுபடி எப்போது..?; அமைச்சர் செஞ்சி மஸ்தான்

by Editor / 10-09-2021 06:41:54pm
நகைக் கடன் தள்ளுபடி எப்போது..?; அமைச்சர் செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செத்தவரை கிராமத்தில், திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது;

"சில கூட்டுறவு சங்கங்களில் ஒரே நபருக்கு பலவிதமான கடன்களும் முறைகேடும் நடந்துள்ளது. இதை பரிசீலனை செய்து வருகிறோம். அரசு பரிசீலனை செய்த உடன், இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் நகைக் கடன் தள்ளுபடியை முதல்வர் அறிவிப்பார்.விவசாய கடன் தள்ளுபடி குறித்து முதல்வர் சொல்லிவிட்டார். ஆனால் சில கூட்டுறவு சங்கங்களில் நில முறைகேடுகள் உள்ளதால் விவசாய கடன்களும் பரிசீலனை செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் கோயில் நிலங்கள், கல்லூரி நிலங்கள், பள்ளிக்கான இடங்கள், தாசில்தார் அலுவலகம் உட்பட பல இடங்களில் கூட சர்வே நம்பர் எடுத்து முறைகேடு நடந்துள்ளது. இதனை ஆய்வு செய்த பின்னர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பின்பு அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளோம்" என்றார்.

 

Tags :

Share via