மனித எலும்பு தேம்ஸ் நதியில் கண்டெடுப்பு

by Admin / 16-02-2022 03:18:11pm
 மனித எலும்பு  தேம்ஸ் நதியில் கண்டெடுப்பு

இங்கிலாந்து நாட்டின் பிரிண்ட்ஃப்ர்ட் என்ற பகுதியில் கடந்த செம்டம்பர் மாதம் கிராபிக் டிசைனரான சைமன் ஹண்ட் என்பவர் தனது படகின் மூலம் தனியாக பயணித்து கொண்டிருந்த நிலையில். 

நதியின் கடற்கரையில் ஆழம் குறைந்த பாறைகள் சூழ்ந்த பகுதியில் கருப்பு நிறத்திலான வித்தியாசமான கட்டை வடிவில் ஒரு பொருள் இருந்ததை கண்டுள்ளார்.

இதனையடுத்து அதனை கைகளில் எடுத்து பார்த்த சைமன் அது ஒரு எலும்பு என்பதை உறுதி செய்துள்ளார். 

இதன் பின்னதாக இது குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.  தகவல் அறிந்து சைமனை சந்தித்த காவல் துறையினர் அவரிடம் இருந்த எலும்பை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். 

அந்த எலும்பானது மிகவும் கடினமாகவும் வித்தியாசமாகவும் இருந்ததால் அதனை பரிசோதனை செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

ஆய்விற்காக அனுப்பப்பட்ட அந்த எலும்பு எந்த காலத்துடையது என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.
 
கார்பன் பரிசோதனையின் போது அந்த எலும்பானது கற்காலத்தின் இறுதி ஆண்டுகளை சேர்ந்தது எனவும், அதாவது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த எலும்பு கிமு 3,516 மற்றும் 3,365 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவையாக இருக்கிறது எனவும், இந்த எலும்பின் மூலம் வாழ்ந்தவர் 5 அடி 7 இன்ச் அதாவது 170 செ.மீ வரை உயரம் கொண்டவராக இருப்பார் என ஆய்வில் கூறப்படுகிறது. 

அதே வேளை அந்த நபர் ஆணா , பெண்ணா என கண்டுபிடிக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த எலும்பு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

 

Tags :

Share via