அமைச்சர் செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.

by Editor / 26-05-2023 08:30:30am
அமைச்சர் செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், மது பான பார்களில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சமீபத்தில் ( அதிமுக ஆட்சிகாலத்தில்) வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சிறப்பு குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக கவர்னரிடம் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார். அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரினார். அதிமுக பொதுசெயலர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் வலியுறுத்தி இருந்தனர். அதிமுக சார்பில் சமீபத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று(மே 26) ரெய்டு நடந்து வருகிறது. சென்னை, கோவை, கரூர் மற்றும் முக்கிய இடங்களில் இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது.

தமிழக அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது.

 

Tags :

Share via
Logo