ஹரித்துவார் செல்கிறேன்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

தமிழ்நாட்டில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செப்.08) டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க முடிவு செய்ததாக தகவல் பரவியது. இதை மறுத்த செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் சற்றுமுன்னர் அளித்த பேட்டியில், “நான் டெல்லிக்கு செல்லவில்லை. மன நிம்மதிக்காகவும், கட்சியின் நலனுக்காகவும் ஹரித்துவார் செல்கிறேன். ஹரித்துவார் கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடவுள்ளேன். நாளை 9 ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கவில்லை” என்றார்.
Tags : ஹரித்துவார் செல்கிறேன்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்