சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம்

by Admin / 18-02-2026 10:28:20pm
சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம்

தமிழ்நாடு -புதுச்சேரி சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோக அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். 20 ஆம் தேதி,வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 2ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்றும் விண்ணப்ப கட்டணமாக பொது தொகுதிக்கு 25 ஆயிரம் ரூபாயும் மகளிர் மற்றும் தனி தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாயும் செலுத்தப்பட வேண்டும் என்றும் விண்ணப்பித்த தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால் தொகுதிகளுக்கு செலுத்தப்பட்ட விருப்பமான கட்டணம் பின்னர் திருப்பி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via