விடுதிக்குள் புகுந்து பணம் பறித்த பாஜ நிர்வாகி மகன் 5 பேர் கொண்ட கும்பல் கைது

வேலூர்: காட்பாடி வைபவ் நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த ஜூன் 6-ம் தேதி இரவு விடுதியில் 5 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து அந்த மாணவனை அச்சுறுத்தி ரூ.74 ஆயிரம், வாட்ச், இயர்பட்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து மாணவன் அளித்த புகாரின் பேரில், மாணவனை மிரட்டி பணம் பறித்த ரோகித், பிரவீன், விக்னேஷ், அரி மற்றும் அபினாஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags :