பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - கணக்கில் வராத 1லட்சத்தி 11ஆயிரம் பறிமுதல்

by Editor / 23-12-2024 10:14:16pm
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - கணக்கில் வராத 1லட்சத்தி 11ஆயிரம் பறிமுதல்

மதுரை நீர்வளத்துறையின்கீழ் பணிகளை செய்யும் ஒப்பந்தக்காரர்களிடம் பில் தொகை வழங்க கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இன்று மாலை தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில்  திடீர் சோதனை மேற்கொண்டனர்.அங்குள்ள வைகை விருந்தினர் இல்லத்தில் வரவேற்பறையில் பைல்களை பார்த்துக்கொண்டிருந்த பெரியாறு வைகை பாசன உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சையது கபீப்பையும் 58, சோதனையிட்டனர்.அவர் வைத்திருந்த கவரில் இருந்தும் பையில் இருந்தும் கணக்கில் வராத மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 800ஐ பறிமுதல் செய்தனர். இத்தொகை ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்டதா என அவரிடம்  விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

Tags : மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - கணக்கில் வராத 1லட்சத்தி 11ஆயிரம் பறிமுதல்

Share via