சட்ட விரோதமாக வெடி மருந்து விற்பனை 7 பேர் கைது-இரண்டு பேர் தலைமறைவு.

by Editor / 23-12-2024 10:18:50pm
சட்ட விரோதமாக வெடி மருந்து விற்பனை 7 பேர் கைது-இரண்டு பேர் தலைமறைவு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் சாலை மூலச்சத்திரத்தில் செயல்படாமல் இருந்த ரிச்சி நான்கு வீலர் ஒர்க் ஷாப்பை ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஷாஜகான் மற்றும் அப்துல் ஹைக்கீம் ஆகியோர் வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக மூலனூரில் இருந்து ஜெலட்டின் வெடி மருந்துகளை பாறைகள் உடைப்பதற்காகவும் கிணறு வெட்டுவதற்கும் கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளனர்.  கடந்த வியாழக்கிழமை அதிகாலை வெடி மருந்து உராய்வு ஏற்பட்டு பயங்கரமாக வெடித்து சிதறியதில் தீப்பிடித்து எரிந்ததில்  ரூ. 40 லட்சம் மதிப்பிலான  கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப்   ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் .இன்று இவர்களுக்கு வெடி மருந்து வழங்கிய முக்கிய குற்றவாளியான மூலனூரைச் சேர்ந்த ருக்குமணி வெடி மருந்து விற்பனையாளர் குமார் வடிவேல் மற்றும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஜாஜகான்  அப்துல் ஹகீம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மூலனூர் ருக்குமணி வெடிமருந்து நிறுவனத்தைச் சேர்ந்த காளிமுத்து ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ரியாஸ் ஆகியோர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ருக்மணி வெடி மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் சிதம்பரசாமி மற்றும் அனுமன் வெடி மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் குப்புசாமி இருவரும் தலைமறைவாக உள்ளனர் அவர்களை  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags : சட்ட விரோதமாக வெடி மருந்து விற்பனை 7 பேர் கைது-இரண்டு பேர் தலைமறைவு.

Share via