அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வெட்டிக் கொலை
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் (வயது 54) இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபன் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :














.jpg)




