அரசு மதுபானக் கடையில் மீதி சில்லறை கேட்டவரை தாக்க முயன்ற விற்பனையாளர்

by Editor / 30-09-2022 10:42:17pm
அரசு மதுபானக் கடையில் மீதி சில்லறை கேட்டவரை  தாக்க முயன்ற விற்பனையாளர்

தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்கு உட்பட்ட அஞ்சாங்கட்டளை ஊராட்சியில்   தீர்த்தாரபுரம் செல்லும் சாலையில்  இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மது பிரியர் ஒருவர் ரூபாய்.600 மொத்தமாக கொடுத்து மது வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 590 போக மீதி பத்து ரூபாய் சில்லரை கேட்டுள்ளார் அப்போது கடையின் விற்பனையாளராக இருந்துவந்த ராம்நகரைச் சேர்ந்த செல்வம்(48) என்பவர் மது வாங்கியதற்கு மொத்த ரூபாயும் சரியாக போய்விட்டது என்றும் மீதி சில்லரை இல்லை என்றும் கூறியுள்ளார் அதற்கு  மது பிரியர் மது வாங்கியதற்கான கணக்குகளை திரும்ப அவரிடம் சொல்லி மீதி பத்து ரூபாய் கேட்டுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கடை விற்பனையாளர் செல்வம் மதுக்கடையின் உள்ளிருந்து கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து மது பிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கவும் முற்பட்டார். இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 அரசு மதுபான கடையின் விற்பனையாளராக இருந்து வரும் செல்வம் ஏற்கனவே ஆலங்குளம் அருகே மதுக்கடையில் வேலை பார்க்கும் பொழுது  மது பிரியர் ஒருவரை சில்லரை கேட்டதற்காக அடித்து உதைத்த வீடியோ சிசிடிவி காட்சிகள் வெளியாகி சிறிது காலம் சஸ்பெண்ட் செய்து இருந்த நிலையில் மீண்டும் பணியில் சேர்ந்து அதே பாணியை கடைபிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மது பிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via