ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் - தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்குச்சென்றது

by Admin / 14-11-2023 08:39:13pm
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் - தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்குச்சென்றது

தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் - தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்குச்சென்றது. (என்ஐஏ)  

தீவிரவாத தாக்குதல்  வழக்குகளை விசாரிக்கும் என்.ஐ.ஏ இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. .பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது..

சென்னை ,கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு கடந்த மாதம் பகலில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடியவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். .அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது...

இவன் ஏற்கனவே பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு முன்பும், தேனாம்பேட்டை காவல் நிலையம் முன்பும் சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசியவன் ..

இதன் தொடர்ச்சியாக, ரவுடி கருக்கா வினோத்தை கிண்டி போலீஸாரிடம், ஆளுநர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.. பின்னர் போலீஸ் நடத்திய விசாரணையில்,, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசினேன் என கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்தான்.. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் இதுகுறித்து கேட்ட போது, “முதலில் கருக்கா வினோத் வெடிகுண்டே வீசல. அவர் பெட்ரோல் நிரப்புன ஒரு பாட்டிலை ரோட்டுல வீசிட்டு போயிட்டாரு. அதை தவிர வேறு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கல. நீட் விலக்குக்காக அவர் வீசியதாக சொல்றாரு. தமிழ்நாட்டில் இருக்குற அனைவருக்குமே நீட் விலக்கு கேட்பதற்கான உரிமை உண்டு  என்று கூறியிருந்தாா்.

 இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக சென்னை பாரிமுனையில் உள்ள இந்து கோயிலுக்குள் கடந்த வாரம் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசினார்.. இவ்வாறு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவங்கள் நிகழ்ந்ததால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பாஜகவும், அதிமுகவும்  குற்றம்சாட்டியது, கோவையில், கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் இதனுடன் கோர்த்து பாஜக தலைவர்கள் பேசினர்.

, இந்நிலையில்,ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு என்.ஐ.ஏ.வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவ் வழக்கு  காவல்துறையிடம் இருந்து என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via