இஸ்ரேல் மீது அணுகுண்டு வீசும் பாகிஸ்தான்? ஈரான் அதிகாரி தகவல்

by Editor / 17-06-2025 04:37:55pm
இஸ்ரேல் மீது அணுகுண்டு வீசும் பாகிஸ்தான்? ஈரான் அதிகாரி தகவல்

இஸ்ரேல்-ஈரான் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் மொஹ்ஷின் ரெசாயி கூறியதாவது: ‛‛இஸ்ரேல் இப்போது ஈரான், ஏமன், பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகளை குறிவைத்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் இப்போது ஒன்று சேராவிட்டால் அவர்கள் அனைவரும் இதேபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு போட்டால் பதிலுக்கு இஸ்ரேல் மீது அணுகுண்டு போட தயார் என்று பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories