கண்டெய்னர் லாரி கவிழ்ந்து 2 பெண்கள் உடல் நசுங்கி பலி

திருப்பூர்: பல்லடத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் நாலுரோடு சந்திப்பில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கண்டெய்னர் லாரி அடியில் சிக்கி 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இக்கோர விபத்தால் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Tags :