மக்களின் துன்பம் தொடரும் : சீமான்

by Staff / 09-12-2023 01:21:28pm
மக்களின் துன்பம் தொடரும் : சீமான்

நேர்மையில்லாத ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வரை மக்களின் துன்பங்கள் தொடரும் என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை, வெள்ள பாதிப்பு குறித்து பேசிய சீமான்; மக்கள் நேர்மையாக இருந்தால் ஆட்சியாளர்களும் நேர்மையாக இருப்பார்கள். துன்பங்களை தருபவர்களுக்கே மக்கள் ஆட்சி அதிகாரங்களை கொடுப்பதால் துன்பம் தொடரத்தான் செய்யும் என வேதனை தெரிவித்தார். மேலும், 2015 வெள்ள பாதிப்பின்போது வெள்ளை அறிக்கை கேட்ட ஸ்டாலின், தற்போது ஏன் அதனை வெளியிட மறுக்கிறார் எனவும் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo