3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய விவசாயிகள்

by Editor / 19-11-2021 04:14:29pm
 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு பட்டாசு வெடித்து  இனிப்பு வழங்கி கொண்டாடிய விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக திரண்ட விவசாயிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மத்திய அரசு 3 வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது அதனை கொண்டாடும் விதமாக வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் பிக் கொண்டாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் என்றும் போராடிய அனைவருக்கும் நன்றி என்றும் ஆதரவு தந்தமைக்காக அனைத்து கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தனர். 

 

Tags :

Share via