ஈரான் புதிய அதிபர் தேர்வு: பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய அதிபராக வெற்றிப்பெற்றுள்ள இப்ராஹிம் ரெய்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் பதவிக் காலம் முடிந்த நிலையில், ஈரான் அதிபருக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.எனினும், அதிபர் தேர்தலில் மக்கள் ஆர்வமில்லாமல் வாக்களித்ததன் காரணமாக குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகின.
அதிபர் தேர்தலில் ஈரான் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரெய்சி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் ஹெமத்தி உள்ளிட்ட நால்வர் போட்டியிட்டனர். இதில் இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், 'இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய அதிபராக வெற்றிப்பெற்றுள்ள இப்ராஹிம் ரெய்சிக்கு வாழ்த்துகள்.
இந்தியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags :