பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குற்றவாளி

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ ரந்துலர் கோண்ட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை விசாரித்த சோன்பத்ரா மாவட்ட எம்பி மற்றும் எம்எல்ஏ நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் எம்எல்ஏ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. எட்டு அரசுத் தரப்பு மற்றும் மூன்று தரப்பு சாட்சிகளை விசாரித்த நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார். இம்மாதம் 15ஆம் தேதி தண்டனை விவரம் தெரியவரும்
Tags :