மது வாங்கி கொடுக்க மறுத்ததால் கொலை; விசாரணை

by Staff / 19-10-2023 01:41:12pm
மது வாங்கி கொடுக்க மறுத்ததால் கொலை; விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு - திண்டுக்கல் சாலையில் செயல்படும் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள காட்டு பகுதியில் கடந்த (13. 10. 2023) தேதியன்று உடலில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

காவல்துறையினர் விசாரணையில் அவர் பழைய வத்தலகுண்டு பட்டாளம்மன் கோவிலில் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் பாண்டியராஜன் (35) என விசாரணையில் தெரிய வந்தது. கொலையாளிகளை தீவிரமாக காவல்துறையினர் தேடி வந்தனர். கடந்த (15. 10. 2023) தேதியன்று வத்தலகுண்டு கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷிடம் எம். வாடிப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலமுருகன் என்ற கூல் (47) என்பவர் சரணடைந்தார்.

அவரை கைது செய்த வத்தலகுண்டு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பாலமுருகன் (என்ற) கூல் இவரது நண்பர் ஒருவர் மற்றும் பில்டிங் காண்ட்ராக்டர் பாண்டியராஜன் ஆகிய மூவரும் மது அருந்தி கொண்டிருந்தனர். சம்பவத்தன்று பாலமுருகன், இவரது நண்பர் இருவரும் பாண்டியராஜனிடம் சரக்கு (மது) வாங்கி தர சொல்லி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, மதுபானம் வாங்கி தர மறுத்த பாண்டியராஜன், அவர்களை தகாத வார்த்தைகளாக திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த, பாலமுருகன், இவர் நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து பாண்டியராஜனை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories