டிடி இண்டர்நேஷ்னல் என்ற பெயரில்  சர்வதேச புதிய சேனல் தொடக்கம்   தூர்தர்ஷன் திட்டம்

by Editor / 20-05-2021 07:58:45pm
டிடி இண்டர்நேஷ்னல் என்ற பெயரில்  சர்வதேச புதிய சேனல் தொடக்கம்   தூர்தர்ஷன் திட்டம்

 


தூர்தர்ஷன் ஒரு புதிய சர்வதேச சேனலை  ‘டிடி இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பரவி வரும் கோவிட் வைரஸ் தொற்று மற்றும் அதன் நிர்வாகம் குறித்து உலக ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து தவறான கண்ணோட்டத்தில் செய்திகளை வெளியிட்டு வரும் சூழ்நிலையில் தூர்தர்ஷன் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதைத் தொடர்ந்து சேனலை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை உருவாக்க ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான விண்ணப்பங்களை கேட்டு தூர்தர்ஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.   
தூர்தர்ஷனுக்கான உலகளாவிய இருப்பை உருவாக்குவதும், இந்தியாவுக்கான சர்வதேச குரலை நிறுவுவதுமே இந்த திட்டத்தின் நோக்கம்.
உலகளாவிய மற்றும் உள்நாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சமகால பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் பார்வையை இந்த சேனல் முன்வைக்கும். இந்த சர்வதேச சேனல் இந்தியாவின் கதையை, கருத்தை உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு சொல்லும் என தூர்தர்ஷனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இந்தியாவின் கருத்து தொலைந்து போவதாக உணர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூர்தர்ஷனின் இந்த உலகளாவிய அணுகுமுறையின் முதல்கட்டமாக பிரச்சார் பாரதியின் உலகளாவிய டிஜிட்டல் தளம் வழியாக நேரடி ஒளிப்பரப்பு செய்வது, மற்ற நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒளிபரப்பாளர்களுடன் இருதரப்பு விநியோக ஏற்பாடு மூலம் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via