பாடப்புத்தகங்களில் சந்திரயான் 3 - அமைச்சர் அன்பில் மகேஷ்

by Staff / 01-09-2023 03:50:38pm
பாடப்புத்தகங்களில் சந்திரயான் 3 - அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்தியாவின் வரலாற்று வெற்றியை 'சந்திரயான் 3' பதிவு செய்திருக்கிறது. விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து, சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 'சந்திரயான் 3' திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளது. இது குறித்து இன்று பேசிய அவர், “சந்திரயான் 3 வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை.. இந்த திட்டத்தில் பணியாற்றியவர்கள் நமது அரசு பள்ளிகளில் படித்தவர்கள் என்பது கூடுதல் பெருமை” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories