கொரோனாவால் கருநீல நிறமாக மாறிய குழந்தையின் கண்கள்

by Staff / 07-09-2023 01:00:02pm
கொரோனாவால் கருநீல நிறமாக மாறிய குழந்தையின் கண்கள்

தாய்லாந்தில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அர்னெல்லா என்பவரின் குழந்தையின் கண்கள் அடர் நீல நிறமாக மாறியது. குழந்தைக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், ஃபேவிபிராவிர் மாத்திரைகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, குழந்தையின் உடல்நிலை மேம்பட்டது. ஆனால், முதல் டோஸ் போட்ட 18 மணி நேரத்தில் குழந்தையின் கண்கள் நீல நிறமாக மாறியதையடுத்து தாய் மருத்துவர்களிடம் சென்றார். இதனால், ஃபேவிபிராவிர் மருந்தை உடனடியாக நிறுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 5 நாட்களுக்குப் பிறகு, குழந்தையின் கண்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

 

Tags :

Share via

More stories

Logo