வாலிபர் வெட்டி படுகொலை வழக்கில் மேலும் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே முகமதுஇர்பான் என்பவரை தலை சிதைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சாகுல்ஹமீது(25), ஜோஸ்மாதவன்(20) ஆகிய 2 பேரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு எஸ்பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் பூங்கொடி, 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் சாகுல்ஹமீத், மாதவன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்
Tags : வாலிபர் வெட்டி படுகொலை வழக்கில் மேலும் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது