திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே பாறை சரிந்து விழுந்தது.

by Editor / 01-12-2024 09:35:02pm
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே பாறை சரிந்து விழுந்தது.

பெஞ்சல் புயல் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய நிலையில் மழை பொழிவின் காரணமாக அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த மண் சரவினால் இன்று மலை மீது இருந்த பாறை அடிவாரத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்கு மேல் விழுந்துள்ளது. அப்போது வீடுகளுக்குள் இருந்த ஏழு பேர் மண் சரிவில் சிக்கியிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். 

தீயணைப்புத் துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Tags : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே பாறை சரிந்து கீழே விழுந்தது.

Share via