முதலமைச்சருக்கு எதிரான வழக்கு தாமதம் ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

by Staff / 01-04-2024 04:09:21pm
முதலமைச்சருக்கு எதிரான வழக்கு தாமதம் ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தாமதம் ஏற்படுவது ஏன்? என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தாமதத்திற்கான காரணத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. “ஜெகன்மோகன் மீதான விசாரணையை அரசியல் காரணங்களுக்காக தாமதப்படுத்தக் கூடாது, விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும்” என சிபிஐக்கு அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தது

 

Tags :

Share via