நித்தியானந்தா நிம்மதியாக இருப்பதாக தகவல்.

நித்யானந்தா உடல்நிலை வதந்திகளை மறுத்து, பரமசிவம் அருளால் நிம்மதியாக இருக்கின்றேன் என விளக்கம் அளித்துள்ளார்.கைலாசா சர்ச்சைகள், நில மோசடி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேரலையில் தோன்றிய நித்யானந்தா, பரமசிவம் அருளால் நிம்மதியாக ஆனந்தமாக இருக்கின்றேன் என்று கூறினார்.
பல்வேறு வழக்குகளில் தேடப்படும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாயமானார். அவர், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற மற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
உடல்நலக்குறைவால் நித்யானந்தா மரணமடைந்ததாக தகவல் உலா வந்தது. இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் செய்து சமாதி அடைந்து விட்டதாக நித்யானந்தாவின் உறவினர் என கூறப்படும் சுந்தரேஸ்வரன், வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மையா, பொய்யா, வழக்கமான புரளியா என தெரியாமல் அவரது சீடர்கள் உள்ளிட்ட பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து முகநூலில் விளக்கம் அளித்துள்ள கைலாசா, நித்யானந்தா ஆரோக்கியமாக உள்ளதாகவும் மார்ச் 30ஆம் தேதி நடந்த உகாதி விழாவில் அவர் நேரலையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையே, இன்று அதிகாலை 4 மணி அளவில் நித்யானந்தா நேரலையில் தோன்றி பேசினார். தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேரலையில் தோன்றிய நித்யானந்தா, பரமசிவம் அருளால் நிம்மதியாக ஆனந்தமாக இருக்கின்றேன் என்று கூறினார். கடந்த 2 ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுக்கு உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும் அதனால்தான் நேரலையில் வருவதை குறைத்து கொண்டதாகவும் நித்யானந்தா தெரிவித்தார்.
Tags : நித்தியானந்தா நிம்மதியாக இருப்பதாக தகவல்.