டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்படுவோருக்கு 25,000 வரை இழப்பீடு வழங்கும் புதிய திட்டம்-ஆர்.பி.ஐ முன்மொழிந்துள்ளது.
நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆர்த்தி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையிலான குழு ரெப்போ விகிதத்தை மாற்றாமல் அஞ்சு புள்ளி 25 சதவீதமாக தொடர ஒரு மனதாக முடிவு செய்துள்ளது. சிறு மதிப்பிலான டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்படுவோருக்கு 25,000 வரை இழப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை ஆர்பிஐ முன்மொழிந்துள்ளது. இந்த இழப்பீடு ஒரு வாடிக்கையாளருக்கு ஆயுள் காலத்தில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த ஒரு முறை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையில் 15 சதவீதம் வாடிக்கையாளரும் 15 சதவீதம் வங்கியும் ஏற்க வேண்டும் மீதமுள்ள 70 சதவீத தொகையை ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியிலிருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய இழப்பீட்டு திட்டத்திற்கான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags :


















