கலர் கலராக பொய் சொல்கிறார் மோடி - ஆர்.எஸ்.பாரதி

by Staff / 01-04-2024 04:06:02pm
கலர் கலராக பொய் சொல்கிறார் மோடி - ஆர்.எஸ்.பாரதி

தோல்வி பயதில் கலர் கலராக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி விமர்சித்துள்ளார். கட்சத்தீவு குறித்த மோடியின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள அவர், கச்சத்தீவை கொடுக்க கூடாது என்று கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்தினார். ஆனால் தமிழினத்தை அழித்த இலங்கை திவாலான போது ரூ.34,000 கோடி கொடுத்த மோடி கச்சத்தீவை மீட்டிருக்கலாமே? இலங்கை மின் பணிகளை அதானிக்கு வாங்கி கொடுத்ததற்கு பதிலாக, கச்சத்தீவை மீட்டிருக்கலாமே? என்று கேள்வியெழுப்பினார்.

 

Tags :

Share via