ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் படங்கள்

by Staff / 01-04-2024 03:12:49pm
ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் படங்கள்

நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கள்வன்' இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் அவர் நடிப்பில் ஏப்ரல் 11ம் "டியர்" என்கின்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.இந்தப் படத்தை இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஏப்ரல் 26 ஆம் தேதி நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 வெளியாகவுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் "ரத்னம்" என்ற படம் ஏப்ரல் 26ல் வெளியாகவுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள "இங்க நான் தான் கிங்கு" என்கின்ற படமும் ஏப்ரல் 26 வெளியாக வாய்ப்புகள் உள்ளது. அடுத்து விஜய் ஆன்ட்டனி நடிப்பில் உருவாகியுள்ள "ரோமியோ" படம் ஏப்ரல் 11 வெளியாகிறது.

 

Tags :

Share via