ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை ஏமாந்ததால் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..?

by Editor / 16-07-2022 11:55:38am
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை ஏமாந்ததால் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..?

கோவையில் உள்ள சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் அனைத்து துறைகளின் சார்பில் தங்கள் திட்ட சேவைகளை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கோவை மாநகர காவல்துறை சார்பிலும் அங்கு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கில் கோவை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் விருதுநகரை சேர்ந்த காளிமுத்து (வயது 29) என்பவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. உடனே அங்கு கூடியிருந்தவர்கள் பார்த்தபோது, காளிமுத்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
 

உடனே அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காளிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.


இது தொடர்பான விசாரணையில் காளிமுத்துவுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அதில் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்த அவர், மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடன்சுமை அதிகரித்ததும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 

Tags : Policeman commits suicide after cheating money in online rummy game..?

Share via