வேழமுகத்தோன் விநாயகரும் இந்து மதமும்

இந்து மதத்தில் முதன்மையான கடவுளுள் ஒருவராக விநாயகர் வழிபடப்படுகிறார்.. எந்தச் செயலைச் செய்யத்தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபட்டால் அச்செயல் தீங்கின்றி நடக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையிலேயே விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது.
இந்து சமயக் கோவில்களில் விநாயகருக்கென்று தனியே கோவில்கள் இருப்பினும் பிற கடவுளர்களின் கோவில்களில் தனியாக விநாயகர் கோவில் கட்டப்படுகின்ற அளவுக்கு விநாயகர் வழிபாடு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இந்து மதத்தில் உள்ளது.
விநாயகர் வழிபாடு இந்துமதத்தில் மட்டுமின்றி புத்தம், சமணம் சார்ந்த இந்திய மதத்தினராலும் வழிபடப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகுச் சிறப்புமிக்க விநாயகர் வழிபாட்டில்….விநாயகர் பிறப்பு பற்றிய கேள்விகள் எழுகின்றன. அதற்குப் பல புராணங்களும் கதைகளின் வடிவில் பதிலளித்துள்ளன… சிவபுராணம், மச்ச புராணம், வராக புராணம், கந்த புராணங்கள் விநாயகர் பிறப்பு பற்றிய கதைகளைப் பதிவு செய்துள்ளன…
பார்வதி நீராடிக் கொண்டிருந்தபோது தன் உடலிலுள்ள அழுக்கினை திரட்டி எடுத்து மனித உருவமாக்கி தன் காவல்காரனாக நியமித்ததாகவும் ஒரு நாள் சிவன் பார்வதியைப் பார்க்க வரும்பொழுது, வாயிற்காவலன் தடுத்து நிறுத்தியதாகவும் உடனே சிவன் கோபம் கொண்டு அவனின் தலையை வெட்டியதாகவும்.. பின் பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று எதிரே வந்த யானையின் தலையை வெட்டி வாயிற்காவலன் தலையில் இணைத்து யானை முகத்தோனாகப் படைக்கப்பட்டான் என்றும் பார்வதி தனது உடலிலுள்ள அழுக்கால் மனித உருவம் செய்து, கங்கை நீரைத்தெளித்து விநாயகரை உருவாக்கினாள் என்றும் முனிவர்கள் தாங்கள் செய்யப்புகும் கெடுதலான செயல்களைத் தடுக்கும் முகமாக ஒரு சக்தியை படைத்தளிக்க வேண்டுமென்று சிவபெருமானிடம் வேண்ட, அவரும் தம் முகத்திலுள்ள ஒளியிலிருந்து ஒர் அழகான சிறுவனைப் படைத்தான் என்றும் அச்சிறுவனின் அழகைக் குறைக்கும் விதமாக மலைமகள் அவனை யானை முகம் கொண்ட, பருத்த தொந்தியுடையவனாக மாறச் சபித்தான் என்றும் சிவனும் பார்வதிதேவியும் காட்டு வழியே செல்கையில் இரண்டு யானைகள் கலவியில் ஈடுபட்டதை பார்த்த அவர்கள் அதேபோன்று ஆண்-பெண் யானைகளாக மாறி கலவியில் ஈடுபட்டதால் பிறந்த குழந்தையே யானை முகமுடைய விநாயகர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இப்படியாக விநாயகர் பிறப்பு பற்றி பல புராணங்கள் கூறியபொழுது…. நாம் பார்க்க வேண்டிய விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் எப்படித் தோன்றி.. நிலைபெற்றது என்பது குறித்துதான்.
ரிக்வேதம் விநாயகரை கணங்களில் தலைவன் என்று குறிப்பிடுவதால் வேதகாலங்களிலேயே விக்னேஷ்வரன் வழிபாடு இருந்திருக்க வேண்டும் என்றும் அது ருத்திரனைக் குறிக்கக்கூடியது என்றும் மறுப்பாரும் உளர்.
கி.மு.4-5 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சில குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. ஆனால், அதற்கு முன்னர் எந்த இலக்கியக் குறிப்புகளும் காணக்கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு உழவர் தெய்வமாக வழிபடப்பட்டதாகச் சொல்லக் கூடியவர்களும் உண்டு. பழைய காலத்தில் விலங்கினங்களை வணங்கக்கூடிய வழிபாடு இருந்தது போன்று விநாயகர் வழிபாடு தோன்றியிருக்க வேண்டும் என்றும் ‘ஓம்’ எனும் பிரணவத்தின் அடிப்படையிலே பழந்தமிழர் விநாயகரை வழிபட்டனர் என்று சொல்வாரும் உளர்
பல்லவர் காலச் சிற்பங்களில் விநாயகர் சிலை இடம் பெற்றிருப்பதால், இவ்வழிபாடு பல்லவர்கள் வடக்கே வென்று தமிழகம் வருகையில் அங்கிருந்து கொண்டு வரப்பட்ட சிற்பம் விநாயகர் சிற்பம் என்று சொல்வார்கள்.. சாளுக்கியர்களை வென்று வாதாபியிலிருந்து கொண்டு வரப்பட்டதே விநாயகர் என்று கி.பி. 6-7 ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் விநாயகர் சப்த கன்னியருடன் இருப்பது போன்ற சிற்பம் உள்ளது விநாயக வழிபாடு தமிழகத்தில் வாதாபி படையெடுப்பிற்கு பின்னரே என்பது தெளிவுபடுத்தும்.
தமிழ் இலக்கியங்களில், தொன்மையான சங்க இலக்கியத்திலோ இல்லை இரட்டைக் காப்பியங்களிலோ, விநாயகர் பற்றி குறிப்புகள் இல்லை… அவற்றில் இந்திரன், வருணன், மாயோன், செவ்வேள், கொற்றவை போன்ற தெய்வங்களின் பெயர்களே இடம் பெற்றிருக்கின்றன.
திருஞான சம்பந்தர், ‘கரியின் மாமுகமுடைய கணபதி’ என்று தேவராத்தில் குறிப்பிட்டிருப்பதும் அவரே சிவனும் பார்வதியும் ஆண் பெண் யானைகளாக மாறி இன்பம் புணர்ந்த புராணக்கதையைப் பாடலில் எடுத்தாண்டுயுள்ளார்.
சாளுக்கியர் காலகட்டத்தில் அதாவது ஏழாம் நூற்றாண்டில்தான் விநாயகர் வழிபாடு அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக காஞ்சியில் உள்ள மாதங்கேஸ்வரர் கோவில், இறவாதேசுவரர் கோவில் திரிபுரந்தகேஸ்வரர் கோவில் அர்த்த மண்டப தென்புறச் சுவற்றில் விநாயகர் சிற்பங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே கோவிலில் கருவறை, அர்த்தமண்டபத்திலும் விநாயகர் சிற்பங்கள்
Tags :