நாம் பின்பற்ற வேண்டிய முன்னோர் சொல்

- நாளுக்கு இரண்டு
- வாரத்திற்கு இரண்டு
- மாதத்திற்கு இரண்டு
- வருடத்திற்கு இரண்டு
என்ன இது.. எல்லாம் இரண்டு இரண்டாக ஆரம்பிக்கிறதே என்கிற கேள்வி உங்களுக்குள் எழும்…ஆனால், இது முழுக்க முழுக்க நம் முன்னோர்கள் வழி வழியாக நமக்குச் சொல்லி வந்த ஆரோக்கியம் – உடல் நலம் சார்ந்த விசயங்கள்.
தினம் மூன்று வேளைகளில் உணவு உண்ணுகிறோம். அதுபோகக் கிடைக்கும் பொழுதெல்லாம் தின்பண்டங்களை அள்ளி அள்ளி வயிற்றுக்குள் போட்டு நிரப்புகிறோம்..
வயிறும் ஓர் இயந்திரமாக இருந்து அத்துணையையும் அரைத்து ரத்தமாக…தேவைப்படும் விட்டமின் A,B,C,D, சோடியம், புரோட்டீன், கார்போஹைட்ரேட் என அத்துணை தாதுக்களையும் பிரித்துத் தேவைப்படும் உடல் உறுப்புகளாக இருக்கும் சதை இயந்திரங்களுக்கு அனுப்பிக் கொண்டும் தேவையற்றவற்றைக் கழிவாக்கி மலக்குடல் வழி – சிறுநீரக குழாய் வழி – சிறுநீரக குழாய்வழி சிறுநீராக வெளியேற்றியும் உடலின் இயக்கத்தைச் சீராக்கி வைத்து… நம் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாக்கிறது…உடலுக்குத் தேவையான தண்ணீர், உப்பு, சர்க்கரை, இரும்பு – கால்சீயம், காரியம், புரோட்டீன் போக உடல் வெப்பம் – குளிர்ச்சி தேவைப்படும் அளவில் வைத்துக் கொள்ளவும் சரியான முறையில் இயங்கி வருகிறது…
எல்லாச் சத்துக்களைப் பிரித்துக் கழிவாக்கியவை…வயிற்றுக்குள்ளே தங்கிவிட்டால் வயிற்றின் இயக்கம் பழுதடைந்து, உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் ஸ்தம்பித்துப்போக வாய்ப்புண்டு… அதனைக் கருத்தில் கொண்டே நம்மவர்கள் நாளுக்கு இரண்டு வேளை மலம் கழித்து வயிற்றை சுத்தமாக வைக்க வேண்டும் என்கிறார்கள்…
வாரத்திற்கு இரண்டு என்றால், உடல் பல்வேறு விதமாக வெப்பத் தாக்குதலுக்கு உடல் சூட்டை ஏற்படுத்தும் உணவுகளாலும் இயற்கையாலும் அதாவது சூரிய வெப்பத்தாலும் செயற்கை குளிர் சாதனப்பெட்டி, ரெகஷின் என்றழைக்கப்படும் இருக்கை விரிப்புகளாலும் ஏற்படும் உஷ்ணத்தைப் போக்க… இரண்டுநாள் புதன்கிழமை, சனிக்கிழமை வாரத்தில் இரண்டு நாள்கள் உடலைச் சூட்டிலிருந்து பாதுகாக்க எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கச் சொல்கிறார்கள்… இதன் வழி மூலம் போன்ற நோய் வராமலிருக்க…தோல்களில் சூரியக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை மட்டுப்படுத்தவே வாரத்திற்கு இருநாள் எண்ணெய்க் குளியல்…
மாதத்திற்கு இரண்டு முறை என்பது திருமணமானவர்கள் தம் கணவன் – மனைவியோடு தாம்பத்தியம் வைத்துக் கொள்வதைச் சொல்கிறது.
உடல்சார் உறவு என்பது மொத்த உடலையும் புத்தெழுச்சியுடன் செயல்படத் தூண்டுவதாக சொல்லப்பட்டாலும் குடும்பம் எனும் வரையறைக்குள் இருப்பவர்கள் இலைமறை காயாகவே தம் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதற்காகவே மாதத்தில் இரண்டுமுறை கணவன் – மனைவி உறவு செய்தல் நல்லது என்று கூறியுள்ளனர்…
வருடத்திற்கு இரண்டு முறை என்பது நம் வயிற்றைச் சுத்தப்படுத்தவே… எல்லா விதமான உணவுகளையும் செரித்துச் செய்யக் கூடிய வயிற்றின் இரைப்பையைச் சுத்தப்படுத்த வேண்டும்…அப்படிச் சுத்தப்படுத்தினால் வயிறு அஜீரக்கோளாறு ஏற்படாது இயல்பாகச் செயல்படும் என்பதற்காகவே…
பேதி மாத்திரை, இஞ்சி கசாயம் மூலம் வயிற்றைச் சுத்தப்படுத்துகிற செயல்முறை கிராமப் புறங்களில் இன்றைக்கும் ஒரு நடைமுறை திட்டமாகவே உள்ளது.
ஆகவே, ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், மேற்சொல்லப்பட்ட இரண்டின் வழியைப் பின்பற்றி நீண்ட காலம் நலமுடன் வாழ முயல்வோம்.
Tags :