சரிந்தது தங்கம் விலை.

by Editor / 21-10-2022 10:33:14am
சரிந்தது தங்கம் விலை.

தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் சவரணுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 20ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,665 ஆகவும், சவரன், ரூ.37,320 ஆகவும் விற்பனை செய்யபடுகிறது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ரூ.61.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.61,500 ஆகவும் விற்கப்படுகிறது

 

Tags :

Share via