திமுகவிலிருந்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கம்!

by Editor / 21-10-2022 10:38:25am
திமுகவிலிருந்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கம்!

திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இந்நிலையில், கே.எஸ் ராதாகிருஷ்ணன் கார்கே குறித்து அவரது சமூக வலைதள பதிவில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருந்தார். இது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவர் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via